ஜெய்ப்பூரில் தனியார் பேருந்து தீ பிடித்து எரிந்ததில் தந்தை மற்றும் மகள் மரணம்
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில்(Jaipur), ஒரு தனியார் பேருந்து தீப்பிடித்து எரிந்ததில் உத்தரப்பிரதேசத்தின் பிலிபிட்(Pilibhit) மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு ஆணும் அவரது மகளும் உயிரிழந்துள்ளனர்.
குறித்த பேருந்தில் ராஜஸ்தானுக்கு தினசரி கூலி வேலைக்கு சென்ற மூன்று குடும்பங்களைச் சேர்ந்த 21 பேர் உட்பட மொத்தம் 65 பயணிகள் இருந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
விபத்தில் உயிரிழந்தவர்கள் 50 வயது நசீம் அன்சாரி மற்றும் 20 வயது சஹிமா என்று அடையாளம் கண்டுள்ளனர்.
மேலும், விபத்தில் பாதிக்கப்பட்டவர்கள் காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், “பேருந்து கூரையில் இருந்த உலோக பொருட்கள், மோட்டார் சைக்கிள்கள் மற்றும் எரிவாயு சிலிண்டர்கள் உயர் அழுத்த மின் கம்பியைத் உரசியதால் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதற்கு முன்னதாக இந்தியாவில் இந்த மாதம் வெவ்வேறு சம்பவங்களில் மூன்று பேருந்துகள் தீ விபத்துக்குள்ளாகி பலர் உயிரிழந்ததை தொடர்ந்து தற்போது இந்த சம்பவம் பதிவாகியுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
ராஞ்சியில் தீ பிடித்து எறிந்த பேருந்து – நூலிழையில் உயிர் தப்பிய 40க்கும் மேற்பட்ட பயணிகள்




