இலங்கையில் கோர விபத்து – பாடசாலை மாணவர்கள் உட்பட மூவர் பலி
குளியாப்பிட்டி, வில்பொல பாலத்திற்கு அருகில் இன்று காலை இடம்பெற்ற வாகன விபத்தில் 2 பாடசாலை மாணவர்கள் உட்பட மூவர் உயிரிழந்துள்ளனர்.
பாடசாலை வேனும் மணல் ஏற்றப்பட்ட டிப்பர் லொரியும் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டது.
இந்த விபத்தில் இரண்டு பாடசாலை மாணவர்கள்உட்பட மூன்று பேர் உயிரிழந்ததாக குளியாப்பிட்டி பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
பாடசாலை வேன் ஓட்டுநரும் அவர்களில் ஒருவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் 13 பாடசாலை மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் குளியாப்பிட்டி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.





