இந்தியாவில் கோர விபத்து – 20 பேர் பலி – பலர் படுகாயம்
இந்தியாவில் இன்று காலையில் ஏற்பட்ட தனியார் பேருந்து ஒன்று விபத்துக்குள்ளானதில் 20 பேர் உயிரிழந்துள்ளனர்.
கர்னூல் மாவட்டம் அருகே உள்ள சின்னா டெக்கூர் கிராமத்தில், இன்று அதிகாலையில் ஐதராபாத்திலிருந்து பெங்களூர் நோக்கிச் சென்ற பேருந்தே விபத்துக்குள்ளானது.
தனியார் பேருந்து ஒன்று இரு சக்கர வாகனத்துடன் மோதியதால், பெட்ரோல் தாங்கி வெடித்த நிலையில் தீ பிடித்து எரிந்துள்ளது.
இதன் காரணமாக 42 பயணிகள் பயணித்த பேருந்தில், 20 பேர் உயிரிழந்துள்ளனர்.
12 பயணிகள் சிறு காயங்களுடன் தப்பியுள்ள நிலையில், அவர்கள் கர்னூல் அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த விபத்து பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு கவலை தெரிவித்துள்ளார். அத்துடன் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அரசு அனைத்து உதவிகளையும் செய்யும் எனவும் அறிவித்துள்ளார்.





