வட அமெரிக்கா

அமெரிக்கக் குடிநுழைவு அதிகாரிகளின் சோதனையின்போது வேளாண் ஊழியர் ஒருவர் மரணம்

அமெரிக்கக் குடிநுழைவு அதிகாரிகளின் சோதனை நடவடிக்கையின்போது காயமடைந்த ஒரு வேளாண் ஊழியர் உயிரிழந்ததாக அவரது குடுபத்தினர் (ஜூலை 12) கூறியுள்ளனர்.

கலிஃபோர்னியாவில் உள்ள சட்டத்தால் அனுமதிக்கப்பட்ட கஞ்சாத் தோட்டத்தில் அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

கள்ளக் குடியேற்றத்துக்கு எதிரான அமெரிக்க அதிபர் டோனல்ட் டிர்ம்பின் முடிவுக்கு ஏற்ப இம்மாதம் 10ஆம் திகதி வேளாண் நிலங்களில் நடத்தப்பட்ட சோதனை நடவடிக்கைகளில் ஆவணமில்லாத 200 குடியேறிகள் கைதுசெய்யப்பட்டனர். அப்போது அதிகாரிகளுக்கும் ஆர்ப்பாட்டக்கார்களுக்கும் இடையே கைகலப்பு மூண்டது.

உயிரிழந்த வேளாண் ஊழியரின் குடும்பம் மெக்சிக்கோவில் உள்ள உறவினர்களுக்கு ஆதரவளிக்கும் நோக்கில் கோஃபண்ட்மி என்ற இணையத்தளத்தைத் தொடங்கினர். ஜூலை 12ஆம் தேதி நபர் உயிரிழந்த செய்தி வெளியிடப்பட்டது.

கள்ளக் குடியேறிகளுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்போவதாகப் பிரசாரத்தின்போது கூறிய டிரம்ப், வாக்களித்தவாறு பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.

ஜூலை 11ஆம் தேதி, குடிநுழைவு, சுங்கத் துறை அதிகாரிகளைத் தாக்கிய ஆர்ப்பாட்டக்காரர்கள் கைதுசெய்யப்பட வேண்டும் என்று அவர் கூறினார்.

லாஸ் ஏஞ்சலிஸ் நகரிலிருந்து கிட்டத்தட்ட 90 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள வென்டுரா பகுதியின் கஞ்சா தோட்டத்தில் நடத்தப்பட்ட கடுமையான சோதனையின்போதுஉயிரிழ்த வேளாண் ஊழியரை அதிகாரிகள் துரத்தியதாக அவரது குடும்பத்தினர் குறிப்பிட்டனர்.

“என் உறவினர் ஜேய்மி ஒரு கடின உழைப்பாளி, அப்பாவி விவசாயி,” என்று கோஃபண்ட்மி பக்கத்தில் பதிவிடப்பட்டது. அதிகாரிகளால் துரத்தப்பட்ட அவர் 30 அடி ஆழத்தில் விழுந்ததாகத் தெரிவிக்கப்பட்டது என்று அதில் கூறியிருந்தது.

எனினும், அதிகாரிகள் துரத்தாமலேயே நபர்பசுமைக் கூட கட்டடத்தின் கூரையில் ஏறி அங்கிருந்து 30 அடி கீழே விழுந்ததாக உள்துறை அமைச்சின் பேச்சாளர் சொன்னார்.

Mithu

About Author

You may also like

செய்தி வட அமெரிக்கா

கனடாவில் வீட்டில் இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை!

கனடாவில் ஆயுத உற்பத்தியில் ஈடுபட்ட நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். நோவா ஸ்கோட்டியாவின் மீகர்ஸ் கிரான்ட் என்னும் பகுதியின் வீடொன்றில் இந்த இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை
செய்தி வட அமெரிக்கா

அறுவைசிகிச்சை முடித்த பின் தெரிய வந்த உண்மை… கதறி அழுத தந்தை!

அமெரிக்காவைச் சேர்ந்த இளம்பெண் தன் தந்தைக்கே தெரியாமல், ரகசியமாக அவருக்குச் சிறுநீரக தானம் செய்துள்ள சம்பவத்தால், நெகிழ்ந்து போன தந்தையின் வீடியோ இணையத்தில் வைரல் ஆகியுள்ளது. அமெரிக்காவின்
error: Content is protected !!