வீட்டில் சடலமாக மீட்கப்பட்ட பிரபல பாகிஸ்தான் நடிகை

பாகிஸ்தானைச் சேர்ந்த 32 வயது நடிகை ஹுமைரா அஸ்கர் அலி கராச்சியில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தார். சமீப காலமாக அவர் வாடகை செலுத்தாமல் இருந்து வந்துள்ளார்.
இந்நிலையில், வீட்டின் உரிமையாளர் இன்று அங்கு சென்றுபார்த்தபோது ஹுமைரா இறந்த நிலையில் கிடந்ததைக் கண்டுள்ளார்.
தகவலறிந்து வந்த போலீசார் அவரது உடலை கைப்பற்றி மருத்துவமனைக்கு அனுப்பினர். பரிசோதனைக்கு பின் இறப்புக்கான காரணம் அறிவிக்கப்படும் என்று காவல்துறை தெரிவித்துள்ளது.
இரு வாரங்களுக்கு முன்பே அவர் இறந்திருக்கலாம் என போலீசார் தெரிவித்தனர்.
பாகிஸ்தானின் பிரபல நடிகை வீட்டில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் திரையுலகினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
(Visited 1 times, 1 visits today)