விமான விபத்தில் உயிரிழந்த பிரபல மெக்சிகன் தொலைக்காட்சி தொகுப்பாளினி
மெக்சிகோவின் நியூவோ லியோனில் பறக்கும் பயிற்சியின் போது விபத்தில் சிக்கி பிரபல தொலைக்காட்சி தொகுப்பாளினி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
டெலிடாரியோ மாட்டுடினோ தொலைக்காட்சியின் தொகுப்பாளரான 43 வயது டெபோரா எஸ்ட்ரெல்லா மற்றும் அவரது பயிற்றுவிப்பாளர் பிரையன் லியோனார்டோ பாலேஸ்டெரோஸ் அர்குவேட்டா விபத்தில் உயிரிழந்துள்ளனர்
பெஸ்குவேரியா நதிக்கு அருகில் இந்த விபத்து நிகழ்ந்தது. சம்பவ இடத்திலேயே இருவரும் இறந்ததை அதிகாரிகள் உறுதிப்படுத்தினர்.
விபத்துக்கான காரணத்தைக் கண்டறிய சிவில் ஏரோநாட்டிக்ஸ் பொது இயக்குநரகம் மற்றும் மாநில வழக்கறிஞர் அலுவலகம் விசாரணைகளைத் தொடங்கியுள்ளன.





