வட அமெரிக்கா

பிளாஸ்டிக் அறுவை சிகிச்சையால் பிரபல அமெரிக்க மாடல் அழகி மரணம் !

பிரபல மாடல் அழகி மாரடைப்பால் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கலிபோர்னியாவைச் சேர்ந்தவர் கிறிஸ்டினா ஆஷ்டேன் கூர்கானி. கிம் கர்தாஷியன் தோற்றம் கொண்ட இவர் பிரபல மாடல் அழகியாக வலம் வந்தார். 34 வயதாகும் இவருக்கு இன்ஸ்டா பக்கத்தில் 618Kக்கும் அதிகமான ரசிகர்கள் இவரை பின் தொடர்ந்தனர்.

இந்நிலையில், கடந்த வியாழக்கிழமை பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை செய்த சில மணி நேரங்களுக்குப் பிறகு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, அவரது குடும்பத்தினர் கலிபோர்னியா மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால், மருத்துவ சிகிச்சை பலனின்றி கிறிஸ்டினா உயிரிழந்தார்.இவருடைய இறுதிச் சடங்கு கூர்கனியில் நடைபெற உள்ளது. இதனால், அவரது குடும்பத்தினர் பணம் திரட்டுவதற்காக GoFundMe பக்கத்தை உருவாக்கியுள்ளனர்.

america-model-christina-ashten-dies

இது குறித்து கிறிஸ்டினாவின் குடும்பத்தினர் சமூகவலைத்தளங்களில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், ‘எங்கள் அழகான, அன்பு மகளும் சகோதரியுமான கிறிஸ்டினா ஆஷ்டேன் கூர்கானியின் துரதிர்ஷ்டவசமான மறைவை நாங்கள் பகிர்ந்து கொள்கிறோம். மிகுந்த ஆழ்ந்த சோகத்துடனும், மிகுந்த கனத்துடனும், உடைந்த இதயத்துடனும் இருக்கிறது என்று பதிவிட்டுள்ளனர்.

இது தொடர்பாக பொலிஸார் அறுவை சிகிச்சை மேற்கொண்ட மருத்துவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

(Visited 12 times, 1 visits today)

Mithu

About Author

You may also like

செய்தி வட அமெரிக்கா

கனடாவில் வீட்டில் இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை!

கனடாவில் ஆயுத உற்பத்தியில் ஈடுபட்ட நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். நோவா ஸ்கோட்டியாவின் மீகர்ஸ் கிரான்ட் என்னும் பகுதியின் வீடொன்றில் இந்த இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை
செய்தி வட அமெரிக்கா

அறுவைசிகிச்சை முடித்த பின் தெரிய வந்த உண்மை… கதறி அழுத தந்தை!

அமெரிக்காவைச் சேர்ந்த இளம்பெண் தன் தந்தைக்கே தெரியாமல், ரகசியமாக அவருக்குச் சிறுநீரக தானம் செய்துள்ள சம்பவத்தால், நெகிழ்ந்து போன தந்தையின் வீடியோ இணையத்தில் வைரல் ஆகியுள்ளது. அமெரிக்காவின்