இந்தியா செய்தி

விபத்தில் சிக்கிய பிரபல நடிகை! பணம் இன்றித் தவிக்கும் குடும்பம்

நடிகை அருந்ததி நாயர், கடந்த 6 நாட்களுக்கு முன்பு, பைக்கில் செல்லும் போது விபத்தில் சிக்கி, சிகிச்சை பெற்றுவரும் நிலையில் அவரது குடும்பத்தினர் சிகிச்சைக்கு பணம் இல்லாமல் தவித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

மலையாள திரையுலகை சேர்ந்த நடிகை அருந்ததி நாயர்… கடந்த 2014ம் ஆண்டு வெளியான, ‘பொங்கி ஏழு மனோகரா’ என்கிற தமிழ் படம் மூலம் திரையுலகில் அறிமுகமானார்.

இதை தொடர்ந்து பிரபல நடிகரும், இசையமைப்பாளருமான,  விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக நடித்தார். இவர் கடைசியாக தமிழில் வெளியான ‘ஆயிரம் பொற்காசுகள்’ என்ற படத்தில் நடித்திருந்தார்.

இந்நிலையில்,  நடிகை அருந்ததி நாயர் தனது சகோதரருடன் கோவளம் பைபாஸ் சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது அடையாளம் தெரியாத வாகனம் இவர்கள் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றதாக தெரிகிறது.

இதில் இருவரும் படுகாயம் அடைந்து சுமார் ஒரு மணி நேரம் ரத்த வெள்ளத்தில் மூச்சு பேச்சின்றி சாலைகளில் கிடந்துள்ளார். பின்னர் அங்கு விரைந்து வந்த மருத்துவர்கள்… உடனடியாக இவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

தற்போது  திருவனந்தபுரம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருவருக்கும் தீவிர சிகிச்சை கொடுக்கப்பட்டு வருகிறது. அருந்ததி நாயருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதால், வெண்டிலேட்டர் உதவியுடன் தீவிர சிகிச்சை கொடுக்கப்பட்டு வருகின்றது.

இந்நிலையில் அருந்ததியின் குடும்பத்தினர், சிகிச்சைக்கு பணம் இல்லாமல் தவித்து வருவதாகவும், பிரபலங்கள் யாரும் உதவ முன்வரவில்லை என கூறிய தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Jeevan

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!