நீர்த்தேக்கத்திலிருந்து சடலமாக மீட்கப்பட்ட குடும்ப பெண்
படுக்கைக்குச் சென்று உறங்கிக் கொண்டிருந்த 56 வயதான பெண்ணொருவர் ஆற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட சம்பவம், நோர்வூட் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட சென்ஜோன் டிலரி கீழ்ப்பிரிவில் இன்று செவ்வாய்க்கிழமை (18) பதிவாகியுள்ளது.
காசல்ரீ நீர்த் தேக்கத்துக்கு நீரேந்திச் செல்லும் கெசல்கமுவ ஓயாவில் இருந்தே குறித்த பெண் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த ஆறுமுகம் தனலெட்சுமி என்ற பெண், திடீரென காணாமல் போயுள்ளார். அக்கம் பக்கத்தினருடன் இணைந்து உறவினர்கள் தேடிய போதே, அவரது சடலம் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.
ஸ்தலத்துக்கு விரைந்துள்ள தடயவியல் பொலிஸாரும் நோர்வூட் பொலிஸாரும் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
(Visited 16 times, 1 visits today)





