இலங்கையில் காதலனால் காதலிக்கு நேர்ந்த கதி – அதிர்ச்சியில் குடும்பத்தினர்

எலபாத பொலிஸ் பிரிவின் தெல்லபட பகுதியில் நேற்று அதிகாலை ஒரு இளம் பெண் கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்டுள்ளார்.
தற்போதைய விசாரணைகளில், கொலை செய்யப்பட்ட இளம் பெண் காலை 6 மணியளவில் தனது வீட்டின் சமையலறையில் இருந்தபோது, வீட்டிற்குள் ரகசியமாக நுழைந்த ஒரு நபர் பின்னால் இருந்து வந்து அவரது கழுத்தை அறுத்துள்ளார் என தெரியவந்துள்ளது.
பெண்ணின் கழுத்தை அறுந்த நபர் அதே இடத்தில் ஒரு போத்தல் விஷத்தைக் குடித்துவிட்டு, போத்தலை ஒரு மேசையின் மீது வைத்துவிட்டு வீட்டை விட்டு ஓடியுள்ளார்.
எனினும் தப்பி ஓடும்போது, அவர் கிராமத்தில் உள்ள ஒரு வயலில் விழுந்து கிடந்த நிலையில் கிராம மக்கள் அவரை இரத்தினபுரி பொது மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.
கொலை நடந்த நேரத்தில் வீட்டில் மின்சாரம் துண்டிக்கப்பட்டிருந்ததாகவும், அந்த இளம் பெண்ணின் தாய் வீட்டில் வேறு வேலைகளில் ஈடுபட்டிருந்தார் எனவும் தந்தை வீட்டை விட்டு வெளியே சென்றிருந்தார் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கொலையாளி இரவில் இந்த வீட்டிலேயே அருகே தங்கியிருந்திருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
உயிரிழந்தவர் தெல்லபடவைச் சேர்ந்த 29 வயதுடைய பெண் எனவும் அவர் களனி பல்கலைக்கழக பட்டதாரி என தெரியவந்துள்ளது.
மேலும், இந்தக் கொலையைச் செய்ததாக சந்தேகிக்கப்படும் நபர், தற்போது இரத்தினபுரி பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார், அதே பல்கலைக்கழகத்தில் படித்த 32 வயதுடையவர் என குறிப்பிடப்படுகின்றது.
அவர் அனுராதபுரம் பகுதியைச் சேர்ந்தவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். இறந்த பெண்ணும் கொலை செய்ததாக சந்தேகிக்கப்படும் நபரும் காதல் உறவில் இருந்ததாக பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை எலபத்த பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.