இணையத்தில் வேகமாக பரவி வரும் போலி நிர்வாண படங்கள் : பெண்களே அவதானம்!
போலி நிர்வாண படங்களை உருவாக்க செயற்கை நுண்ணறிவு (AI) பயன்படுத்துவதை பிரச்சாரகர்கள் எச்சரிக்கின்றனர்.
இன்டர்நெட் மேட்டர்ஸின் சமீபத்திய கணக்கெடுப்பில் 13% இளைஞர்கள் போலி நிர்வாண புகைப்படங்களால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த மாத இறுதியில் இணைய நிறுவனங்களுக்கு போலி நிர்வாணங்களை சட்டவிரோதமாக விநியோகிப்பதைத் தடுக்க நடைமுறைக் குறியீடுகளை அறிமுகப்படுத்துவது தொடர்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
சமூகவலைத்தளங்களில் பிரபலங்களில் ஒருவரும், முன்னாள் லவ் ஐலேண்ட் போட்டியாளருமான, 33 வயதான காலி ஜேன் பீச், தனது உள்ளாடை பிராண்ட் புகைப்படத்தை நிர்வாணமாக மாற்றுவதற்கு யாரோ ஒருவர் AI ஐப் பயன்படுத்தியதாக புகாரளித்துள்ளார்.
இது தொடர்பில் கருத்து வெளியிட்ட அவர், அந்த புகைப்படங்கள் யதார்த்தமாக இருந்ததாக குறிப்பிட்டுள்ளார்.
போலி நிர்வாணங்களை உருவாக்குவது ஏற்கனவே சட்டவிரோதமானது என்றாலும், AI நிர்வாணங்களை உருவாக்குவதைத் தடைசெய்யும் புதிய சட்டம் அடுத்த ஆண்டு கொண்டுவரப்படும் என பிரித்தானிய அரசாங்கம் கூறியுள்ளது.
இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் புகைப்படங்களை பதிவிடுவது, மற்றும் புகைப்படங்களை நண்பர்களுக்கு பகிர்வது உள்ளிட்ட விடயங்களில் அவதானமாக இருக்குமாறு காவல்துறையினர் வலியுறுத்தியுள்ளனர்.