செய்தி தமிழ்நாடு

விஜயகாந்த் குறித்து போலிச் செய்தி!! உயிரிழந்த வெறித்தனமான ரசிகர்

சினிமாவில் சில நடிகர்களுக்கு வெறித்தனமான ரசிகர்கள் இருப்பார்கள். தான் விரும்பும் நடிகருக்காக உயிரை கூட கொடுப்பார்கள். தன் தலைவனுக்கு ஒன்றென்றால் எந்த எல்லைக்கும் போவார்கள்.

எம்.ஜி.ஆர் காலத்தில் இருந்து இது இருக்கிறது. அடுத்தது ரஜினிக்கு அது போல ரசிகர்கள் இருக்கிறார்கள். ரஜினிக்கு பின் விஜயகாந்துக்கு மட்டுமே அப்படி ரசிகர்கள் உருவானார்கள்.

இன்னும் சொல்லப்போனால் கிராமப்புறங்களில் விஜயகாந்துக்குதான் அதிக ரசிகர்கள் எப்போதும் உண்டு. கடந்த சில வருடங்களாக விஜயகாந்த் உடல் நலம் பாதிக்கப்பட்டு சினிமா மற்றும் அரசியல் என இரண்டிலிருந்தும் ஒதுங்கி இருக்கிறார்.

இந்நிலையில், அவரின் தீவிர ரசிகர் மற்றும் விஜயகாந்தின் எங்கள் ஆசான், சகாப்தம், விருதகிரி ஆகிய படங்களில் வசனம் எழுதிய ஆர்.வேலுமணி நேற்று மரணமடைந்தார்.

விஜயகாந்த் உடல் நிலைபற்றி வெளியான செய்திகளில் அவர் மரணமடைந்ததாக சொல்லப்பட்டது. இவர் விஜயகாந்த் குடும்பத்துடன் நெருங்கி பழகி வந்தவர். விஜயகாந்த் மீது அளவுக்கடந்த அன்பு வைத்திருந்தவர்.

நடந்தது என்னவெனில், விஜயகாந்த் உடல்நிலை பற்றி எதிர்மறையாக பலரும் அவரை தொடர்பு கொண்ட பேசியுள்ளனர்.

விஜயகாந்த் மீது தீவிர அன்பு வைத்திருக்கும் அவருக்கு இது மன அழுத்தத்தை ஏற்படுத்தி அதனால் மாரடைப்பு ஏற்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

ஊடகங்களும், பொய் செய்திகளை பரப்பும் நபர்களாலும் ஒரு உயிரே பறிபோயுள்ளது.

இதனால்தான் விஜயகாந்தின் மனைவி பிரேமலதா நேற்று செய்தியாளர் சந்திப்பில் ‘ஏன் இப்படி பொய் செய்திகளை பரப்புகிறீர்கள்?’ என கண்ணீர் விட்டு அழுதார்.

ஆர்.வேலுமணி திருமணம் செய்து கொள்ளவில்லை. வயதான அம்மாவுடன் வசித்து வந்தார். இப்போது அவரின் அம்மா ஆதரவில்லாமல் நிற்கிறார். அவருக்கு விஜயகாந்த் தரப்பில் நிதியுதவியும் அளிக்கப்பட்டுள்ளது.

 

(Visited 8 times, 1 visits today)

Jeevan

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி