போலித் தகவல்கள் – 03 வயதிற்கு உட்பட குழந்தைகளுக்கு கற்றுக்கொடுக்கும் ஐரோப்பிய நாடு!
பின்லாந்தில் போலிச் செய்திகள் மற்றும் தகவல்களை கண்டறிவது தொடர்பில் குழந்தைகளுக்கு கற்பிக்கும் செயற்திட்டம் ஆரம்பமாகியுள்ளது.
03 வயதுக்குட்பட்ட குழந்தைகள் தொடங்கி அனைவருக்கும் இந்த திட்டத்தை விரிவுப்படுத்த அந்நாட்டு அரசாங்கம் எதிர்பார்க்கிறது.
இந்த நீண்டகால கல்வி அணுகுமுறை, ஊடகங்களை பகுப்பாய்வு செய்வதற்கும் தவறான தகவல்களை அடையாளம் காண்பதற்கும் மாணவர்கள் மத்தியில் அறிவு திறனை வளர்க்கும் எனக் கூறப்படுகிறது.
இது தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள ஒரு அறிவிப்பில், கல்வியாளர்கள் இப்போது தங்கள் கற்பித்தலில் செயற்கை நுண்ணறிவு எழுத்தறிவை ஒருங்கிணைக்கும் பணியை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
“நல்ல ஊடக எழுத்தறிவு திறன்களைக் கொண்டிருப்பது மிகப் பெரிய குடிமைத் திறன் என்று நாங்கள் நினைக்கிறோம்,” என ஹெல்சின்கி நகரத்திற்கான கல்வியியல் நிபுணரான கியா ஹக்கலா (Kiia Hakkala) குறிப்பிட்டுள்ளார்.
“இது நாட்டின் பாதுகாப்பிற்கும் நமது ஜனநாயகத்தின் பாதுகாப்பிற்கும் மிகவும் முக்கியமானது.” என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.





