செய்தி வட அமெரிக்கா

அமெரிக்காவில் உச்சக்கட்ட வெப்பம் – உருகி சட்டையுடன் ஒட்டிக்கொண்ட பையின் வார்ப்பட்டை

அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் கடும் வெயிலால் கை பையின் வார்ப்பட்டை உருகி சட்டையுடன் ஒட்டிக்கொண்ட சம்பவம் இடம்பெற்றுள்ளது.

அந்த அளவிற்கு வெப்பம் இருப்பதாக ஒருவர் TikTok தளத்தில் பதிவேற்றம் செய்த காணொளியில் கூறினார்.

காணொளியில் அவர் தோள்பட்டையில் பை மாட்டியிருப்பதைப் பார்க்கமுடிகிறது. பையை அகற்றியவுடன் அவர் அணிந்திருந்த வெள்ளைச் சட்டையில் பையின் வார்ப்பட்டை வடிவத்தில் கறைகள் தெரிகின்றன.

அது பிரபல Coach நிறுவனத்தின் பை என்றும் அவர் காணொளியில் கூறுகிறார். அந்தக் காணொளி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

அது உண்மையான Coach பையாக இருக்க வாய்ப்பில்லை; போலியாக இருக்கக்கூடும் என்று அவர்கள் கூறினர்.

காணொளியைத் தயாரித்தவர் அது Coach பை என்று நம்பி ஏமாந்துவிட்டதாக இணையவாசிகள் பதிவிட்டனர்.

எனினும் எந்த அளவிற்கு வெப்பம் அதிகரித்துள்ளதை காணொளி எடுத்துரைப்பதாக அவர்கள் கூறினர். தற்போது நியூயார்க் நகரில் வெப்பநிலை சுமார் 38 பாகை செல்சியஸை எட்டியுள்ளது.

SR

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!