பெங்களூரு பேருந்து நிலையத்தில் வெடிபொருட்கள் – மூவர் கைது

பெங்களூருவின் கலாசிபல்யா பேருந்து நிலையத்தில் வெடிபொருட்கள் கண்டெடுக்கப்பட்டதை தொடர்ந்து மூன்று பேர் கைது செய்யப்பட்டதாக கர்நாடக காவல்துறை தெரிவித்துள்ளது.
காவல்துறையின் அறிக்கையின்படி, இந்த வழக்கில் இதுவரை மொத்தம் 22 (R.E.X-90) ஜெலட்டின் குச்சிகள் மற்றும் 30 மின்சார டெட்டனேட்டர்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
கடந்த வாரம் BMTC பேருந்து நிலையத்தில் வெடிபொருட்கள் வைக்கப்பட்டது குறித்து BMTC உதவி போக்குவரத்து அதிகாரி அளித்த புகாரின் அடிப்படையில் கலாசிபல்யா காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
விசாரணை அதிகாரிகள் சம்பவ இடத்தில் ஆய்வு செய்து,அந்த இடத்தில் காணப்பட்ட ஆறு (R.E.X-90) ஜெலட்டின் குச்சிகள் மற்றும் 12 மின்சார டெட்டனேட்டர்களை பறிமுதல் செய்தனர்.
மூத்த அதிகாரிகள் ஐந்து குழுக்களை அமைத்தனர், அவர்கள் தகவலறிந்தவர்கள் மற்றும் தொழில்நுட்ப உதவியுடன் விரைவாக செயல்பட்டு, இன்று இந்த வழக்கில் தொடர்புடைய மூன்று பேரை கைது செய்தனர்.