உலகம் செய்தி

சிரியாவின் ஹோம்ஸ் மசூதியில் குண்டுவெடிப்பு – அறுவர் பலி

சிரியாவின் ஹோம்ஸ் நகரில் உள்ள மசூதியொன்றில் ஏற்பட்ட குண்டுவெடிப்பில் சுமார் 6 பேர் உயிரிழந்துள்ளனர்.

மேலும் 20 இற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

வெள்ளிக்கிழமை தொழுகைக்கு பிறகு, ஹோம்ஸ் நகரின் வாடி அல்-தஹாப் பகுதியில் உள்ள இமாம் அலி பின் அபி தாலிப் மசூதி மீது இந்த தாக்குதல் நடந்ததாக சிரிய அரசுச் செய்தி நிறுவனம் (SANA) தெரிவித்துள்ளது.

சம்பவ இடத்தை பாதுகாப்புப் படைகள் சுற்றிவளைத்து விசாரணை நடத்தி வருகின்றன.

இந்த வெடிப்பு தற்கொலை தாக்குதலாலோ அல்லது முன்கூட்டியே வைக்கப்பட்ட வெடிகுண்டாலோ ஏற்பட்டிருக்கலாம் என  அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்

மசூதியை இலக்குவைத்து தாக்குதல் நடத்தப்பட்டதால், அந் நாட்டில் மத மோதல்களை அதிகரிக்கக் கூடும் அச்சங்கள் எழுந்துள்ளன.

இதுவரை எந்த அமைப்பும் இந்த தாக்குதலுக்கு பொறுப்பேற்கவில்லை. ஆனால் அண்மை காலமாக சிரியாவில் ஐஎஸ்ஐஎஸ் (IS) அமைப்பின் செயற்பாடுகள் அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது.

இந்த தாக்குதல், சிரியாவில் பாதுகாப்பு நிலைமை இன்னும் பலவீனமாக இருப்பதை காட்டுவதாக கூறப்படுகிறது.

Sainth

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!