பிரித்தானியாவில் 2026 இல் முதல் பெயரிடப்பட்ட புயல் – கோரெட்டி
பிரான்ஸ் வானிலை ஆய்வு சேவையால் பெயரிடப்பட்ட புயல் “கோரெட்டி” (Goretti), பிரித்தானியாவில் இந்த ஆண்டின் முதல் பெயரிடப்பட்ட புயலாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கடுமையான வானிலை நெருங்கி வருவது குறித்து பொதுமக்களுக்கு தெளிவான மற்றும் உத்தியோகப்பூர்வ தகவல்களை வழங்குவதே புயல்களுக்கு பெயரிடுவதன் முக்கிய நோக்கம் என அந்த வானிலை அலுவலகம் தெரிவித்துள்ளது.
எளிதில் அடையாளம் காணக்கூடிய பெயர் பயன்படுத்தப்படுவதால், ஊடகங்கள் மற்றும் அரசு அமைப்புகள் ஒருங்கிணைந்து தகவல்களை பகிர முடிவதாகவும்
தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் பொதுமக்கள் அபாயங்களை புரிந்துகொண்டு, தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வசதியாக அமைகின்றது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பிடத்தக்க சேதம் அல்லது இடையூறு ஏற்படும் என எதிர்பார்க்கையில் அம்பர் அல்லது சிவப்பு எச்சரிக்கை அளவிற்கு சென்றால் மட்டுமே புயல்களுக்கு பெயரிடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
பலத்த காற்று மட்டுமின்றி, பலத்த மழை வீழ்ச்சி அல்லது கடும் பனிப்பொழிவு போன்ற வானிலை நிலைகளும் இதற்குக் காரணம் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.





