இறைச்சி உணவுகளை அதிகம் உட்கொள்பவர்களுக்கு வல்லுநர்கள் எச்சரிக்கை
இறைச்சி உள்ளிட்ட மாமிச உணவுகளை அளவோடு மட்டுமே உணவில் சேர்க்க வேண்டும் என புதிய ஆய்வு அறிக்கையில் வல்லுநர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
தாவர அடிப்படையிலான உணவுகள் தான் ஆரோக்கியத்திற்கு உகந்தவை என இந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.
இறைச்சி, உப்பு, சர்க்கரை, கொழுப்பு ஆகியவை மிதமான அளவிலேயே பயன்படுத்தப்பட வேண்டும்.
தாவரச் சார்ந்த உணவுகள் அதிகம் உட்கொள்ளப்பட வேண்டும் எனப் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
சிவப்பு இறைச்சி (மாடு, ஆடு, பன்றி) 15 கிராம், காய்கறிகள் 200 கிராம், பழங்கள் 300 கிராம், தானியங்கள் 210 கிராம், பால் மற்றும் பால் சார்ந்த பொருட்கள் 250 கிராம், கடலுணவுகள் 30 கிராம் ஆகியவையே ஆய்வாளர்கள் பரிந்துரைக்கும் தினசரி உணவுகளாகும்.
இந்த வகையான உணவுப் பழக்கங்கள், நாட்பட்ட நோய்கள் வருவதிலிருந்து தடுப்பதாகவும், நீண்ட ஆயுளுக்கும், பசுமையான வாழ்க்கை முறைக்கும் இது உதவும் எனவும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
மாமிசம் குறைவாகச் சாப்பிட வேண்டும் என்று 2019ஆம் ஆண்டு வெளியான ஆய்வொன்றிலும் வலியுறுத்தப்பட்டது. அப்போது அறிவியல் சமூகங்கள் பரிந்துரையை வரவேற்ற போதும் உலகெங்கிலும் உள்ள விவசாய, உணவு அமைப்புகள் அதனை நிராகரித்துவிட்டன.





