அமெரிக்காவில் வெப்பமயமாதலால் ஏற்பட்டுள்ள பாதிப்பு – விப்ரியோ பாக்டீரியா தொற்று அதிகரிப்பு

அமெரிக்காவில் வெப்பநிலை அதிகரிப்பு மற்றும் கடல்களின் வெப்பமயமாதலால், விப்ரியோ வல்னிபிகஸ் என்ற பாக்டீரியா தொற்று மீண்டும் அதிகரித்து வருகின்றது .
இந்த பாக்டீரியா வெதுவெதுப்பான, குறைந்த உப்புள்ள நீரில் வளரும் நோய்க்கிருமியாகும்.
விப்ரியோசிஸ் எனப்படும் இந்த தொற்று, பொதுவாக பச்சை மட்டி மீன்கள் அல்லது திறந்த காயத்தில் கடல் நீர் நுழைவதின் மூலம் பரவுகிறது.
மரணம் ஏற்படும் சாத்தியம் அதிகமாகவே உள்ளதாக CDC மற்றும் JAMA நிறுவல்கள் தெரிவித்துள்ளன. 2023ஆம் ஆண்டு, இதனால் ஏற்பட்ட இறப்புகள் கடல் உணவுத் தொடர்பான இறப்புகளில் 95 சதவீதத்தை கடந்துள்ளன.
2025 ஆம் ஆண்டு மாசசூசெட்ஸில் மட்டும் 71 வழக்குகள் பதிவாகியுள்ளன. சூடான நீரிலும், பச்சை கடல் உணவுகளிலும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர்.
விப்ரியோ வல்னிபிகஸின் பரவல் சுற்றுச்சூழல் மாற்றங்களின் தீவிரத்தையும், நம் நலனில் அதன் தாக்கத்தையும் நினைவூட்டுகிறது.