எரிபொருள் மற்றும் சமையல் எரிவாயுவிற்கு விதிக்கப்பட்டிருந்த வரி நீக்கம்
எரிபொருள் மற்றும் சமையல் எரிவாயு மீது விதிக்கப்பட்டிருந்த துறைமுகம் மற்றும் விமான நிலைய வரியை ஜனவரி முதலாம் திகதி முதல் நீக்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதன்படி எரிபொருள் மற்றும் சமையல் எரிவாயுவுக்கான துறைமுகம் மற்றும் விமான நிலைய வரியானது வட் வரியை அமுல்படுத்துவதிலிருந்து நீக்கப்படுவதாக நிதி அமைச்சின் வரி கொள்கை ஆலோசகர் தனுஜா பெரேரா தெரிவித்தார்.
எரிபொருள் மீதான 18 சதவீத வட் வரியை நடைமுறைப்படுத்தும்போது, துறைமுகம் மற்றும் விமான நிலைய வரியான 7.5 சதவீதம் அந்த வரியில் இருந்து நீக்கப்படும்.
சமையல் எரிவாயுவுக்கான 18 சதவீத வட் வரியை நடைமுறைப்படுத்துவதில் தற்போது 2.5 சதவீதம் துறைமுகம் மற்றும் விமான நிலைய வரியும் நீக்கப்பட உள்ளது.
அதன்படி, எரிபொருள் மற்றும் எரிவாயு மீது வட் விதிக்கப்பட்ட பின்னர், விலை அதிகரித்தாலும், 18 சதவீதம் அதிகரிக்காது.
பெற்றோல், டீசல், எரிவாயு போன்ற பொருட்களுக்கு அதிகபட்ச விலை நிர்ணயம் செய்யப்படுவதால், அந்தந்த வரி அதிகரிப்பை சரிசெய்து அவற்றின் விலை நிர்ணயிக்கப்படும் என நிதியமைச்சின் வரிக் கொள்கை ஆலோசகர் தனுஜா பெரேரா தெரிவித்தார்.