முல்லைத்தீவில் ஆயுதங்கள் மற்றும் தங்கம் தேடி அகழ்வுப் பணி ஆரம்பம்!
விடுதலைப் புலிகளால் புதைக்கப்பட்ட ஆயுதங்கள் தங்க நகைகள் இருப்பதாக தெரிவித்து முள்ளிவாய்க்கால் மேற்கு பகுதியில் முல்லைத்தீவு நீதவான் நீதிமன்ற நீதிபதி தர்மலிங்கம் பிரதீபன் முன்னிலையில் அகழ்வுப் பணி ஆரம்பமாகி நடைபெற்று வருகிறது.
பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கு அமைய நீதிமன்ற அனுமதியை பெற்று இன்று (25) மாலை 2.30 மணியளவில் அகழ்வு பணி ஆரம்பமாகி நடைபெற்று வருகிறது.

பொலிஸார், விஷேட அதிரடி படையினர், இராணுவத்தினர், கிராம சேவையாளர், தொல்லியல் திணைக்களத்தினர், சுகாதார பிரிவினர், தடயவியல் பொலிஸார் முன்னிலையில் அகழ்வு பணி நடைபெற்று வருகின்றது.







(Visited 11 times, 1 visits today)





