முன்னாள் ஜனாதிபதி போல்சனாரோ தேர்தலில் போட்டியிட தடை

பிரேசிலின் முன்னாள் ஜனாதிபதி ஜெய்ர் போல்சனாரோ 2030 வரை அரசியல் பதவிக்கு போட்டியிட தடை விதித்து பிரேசிலின் உயர் தேர்தல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த தீர்ப்பை ஆதரித்து 5 நீதிபதிகள் கையொப்பமிட்ட நிலையில், இரண்டு நீதிபதிகள் மட்டும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இந்த நீதிமன்ற தீர்ப்பால், முன்னாள் அதிபர் போல்சனாரோ, 2026ல் நடக்கவுள்ள தேர்தலில் போட்டியிட முடியாது.
எனினும், தன் மீதான குற்றச்சாட்டுகளில் நிரபராதி என்பதால் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்போவதாக முன்னாள் அதிபர் போல்சனாரோ தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு நடைபெற்ற பிரேசில் அதிபர் தேர்தலில், பிரேசிலின் தற்போதைய அதிபர் லூயிஸ் இசானியோ லுலா டா சில்வா, முன்னாள் அதிபர் ஜெய்ர் போல்சனாரோவை தோற்கடித்தார்.
(Visited 11 times, 1 visits today)