உங்கள் வியர்வை கூட நறுமனம் வீசும் : இந்த அற்புத பழம் பற்றி தெரியுமா?
இது நாம் அறியாத பழ வகைகளில் ஒன்றுதான் கெப்பல் பழம். இந்த மரம் எல்லா கால நிலையிலும் வரும்.
இது ராஜாக்கள் காலத்தில் அவர்கள் மட்டுமே பயன்படுத்தி வந்த பழம் என்பதால் தான் இந்த மரத்தை பற்றி அவ்வளவு யாருக்கும் தெரியவில்லை.
இந்த மரத்திற்கு உரித்தான சில அம்சங்களும் இருக்கின்றன. அதாவது, ஆண் பூ பெண் பூ ஓரே மரத்தில் காய்க்கும். அதேநேரம் இந்த பழத்தை சாப்பிட்டு வந்தால் உடலில் இருந்து வெளியேறும் வியர்வை நறுமணம் கமழும்.
இது பார்ப்பதற்கு சப்போட்டா பழம் போலதான் காட்சியளிக்கும். அதேநேரம் இந்த பழத்தின் சுவை பலாப்பழம் அன்னாசி பழம் தேங்காய் மூன்றும் சேர்ந்த கலவையாக இனிப்பாக இருக்குங்க.
இதில் விட்டமின் டி, நார்ச்சத்து என்று நிறைய சத்துக்கள் இருக்கின்றன. மருத்துவபயன் என்று பார்க்கையில், வாய்நாற்றம் போக்கும். சருமம் பொழிவாய் இருக்கும் வயதான தோற்றத்தை குறைக்கும். மேலும் சிறுநீரக பிரச்சினையை முற்றிலும் சரிசெய்யும், இரத்தத்தை சுத்திகரிக்கும் டையலிஸிஸஸ் செய்வதை குறைக்கும் மேலும் நோய் எதிர்ப்புச் சக்தியைக் கொடுக்கும் பாக்டீரியா போன்ற வைரஸ் போன்ற பிரச்சனைகளில் இருந்து காப்பாற்றும். இப்படி ஏராளமான சத்துக்கள் நிறைந்துள்ளன.
இதேவேளை இது காய் விட எட்டு வருடங்கள் ஆகும் என்பதுடன், எல்லா இடங்களிலும் வளரும் தன்மை காணப்படுகிறது. அதேநேரம் இந்த பழம் அதிகளவில் இந்தோனேசியாவில் தான் விளைகிறது.