முக்கிய இரசாயனத்துக்கு தடை விதிக்கும் ஐரோப்பிய ஒன்றியம்

ஐரோப்பிய நாடுகளில் சில வகை நகச் சாயங்களில் உள்ள முக்கிய இரசாயனத்துக்கு ஐரோப்பிய ஒன்றியம் தடை விதித்துள்ளது.
trimethylbenzoyl diphenylphosphine oxide அல்லது TPO என்று அழைக்கப்படும் இரசாயனம் gel நகச் சாயம் விரைவில் உலர்வதற்காகப் பயன்படுத்தப்படுகின்றது.
அந்த ரசாயனம் கருத்தரிப்புப் பிரச்சினைகளை ஏற்படுத்தக்கூடியது என்பது விலங்குகளிடம் நடத்தப்பட்ட ஆய்வுகளில் தெரியவந்துள்ளதாக ஐரோப்பிய ஆணையம் குறிப்பிட்டுள்ளது.
Gel வகை நகச் சாயம் வழக்கமான நகச் சாயத்துடன் ஒப்பிடுகையில் வேகமாக உலர்ந்துவிடும். அது வழக்கமான சாயத்தை விட அதிக நாள்களுக்கு நீடிப்பதுண்டு.
Gel வகை நகச் சாயத்தை விரும்பும் சிலர் அது இனி முற்றிலும் கிடைக்காதா என்று எண்ணி வருந்துகின்றனர்.
மாற்று இரசாயனங்களைப் பயன்படுத்தும் Gel நகச் சாயங்களுக்குத் தொடர்ந்து அனுமதி உண்டு என்பதை ஆணையம் விளக்கியது .
சில நிறுவனங்கள் நகச் சாயம் செய்யும் விதத்தை மாற்ற தொடங்கியுள்ளது.