அறிவியல் & தொழில்நுட்பம் ஐரோப்பா

எரிபொருள் தீர்ந்ததால் கடலில் விழுந்த ஐரோப்பிய செயற்கைக்கோள்..

ஐரோப்பிய செயற்கைக்கோள் ஒன்று நேற்று அட்லாண்டிக் பெருங்கடலில் விழுந்துள்ளது. ஏயோலஸ் (Aeolus) என்று பெயரிடப்பட்ட இந்த செயற்கைக்கோள் 1,360 கிலோகிராம் எடையுள்ள வானிலை கண்காணிப்பு செயற்கைக்கோள் ஆகும். இது 2018ம் ஆண்டு விண்ணில் ஏவப்பட்டது. இதில் டாப்ளர் விண்ட் லிடார் எனப்படும் அதிநவீன லேசர் கருவியை கொண்டுள்ளது.

இது வானிலை முன்னறிவிப்புகள் மற்றும் காலநிலை மாதிரிகளை மேம்படுத்த, ஐரோப்பா முழுவதும் வானிலை மையங்களுக்கு தரவுகளை வழங்கி ஆராய்ச்சியாளர்களுக்கு உதவியது. ஏயோலஸ் செயற்கைக்கோளில் கடந்த மே மாதம் எரிபொருள் தீர்ந்ததால், அதன் சுற்றுப்பாதையை பராமரிக்க முடியவில்லை என கூறப்படுகிறது.

இதனால், ஐரோப்பிய விண்வெளி நிறுவனம் (ESA) விண்வெளியில் உள்ள மற்ற விண்கலம் அல்லது செயற்கைக்கோளுடன் மோதும் அபாயத்தை குறைக்க செயற்கைக்கோளை வேண்டுமென்றே கடலில் மோத செய்ய முடிவு செய்தது. ஏயோலஸ் செயற்கைக்கோள் மணிக்கு சுமார் 17,500 மைல் வேகத்தில் பூமியின் வளிமண்டலத்தில் மீண்டும் நுழைந்ததாக கூறப்படுகிறது.

பிறகு கிரீன்லாந்தின் தெற்கே அட்லாண்டிக் பெருங்கடலில் ஏயோலஸ் செயற்கைக்கோள் விழுந்துள்ளது. செயற்கைக்கோள் கீழே விழும் திசையை மாற்றியதன் மூலம் அதில் இருந்து சிதறும் பாகங்கள், மக்கள் மற்றும் பிற பொருட்களின் மீது விழுந்து சேதத்தை ஏற்படுத்தும் அபாயம் ஆனது தடுக்கப்பட்டுள்ளது என்று ஐரோப்பிய விண்வெளி நிறுவனம் கூறியுள்ளது.

இந்த செயற்கைக்கோள் பூமியின் காற்று மாதிரிகள் பற்றிய மதிப்புமிக்க தரவுகளை வழங்கியது, இது வானிலை முன்னறிவிப்பை மேம்படுத்த உதவியது. ஏயோலஸால் சேகரிக்கப்பட்ட தரவு, பல ஆண்டுகளாக வானிலை மையங்களால் தொடர்ந்து பயன்படுத்தப்படும் என்று ஐரோப்பிய விண்வெளி நிறுவனம் கூறியது. சுமார் 1,360 கிலோ எடையுள்ள இந்த செயற்கைக்கோள், மூன்று வருடங்கள் சுற்றுப்பாதையில் இருக்க வேண்டும் என்ற குறிக்கோளுடன் ஏவப்பட்டது. ஆனால், அதனைத்தாண்டி கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக விண்வெளியில் இருந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

(Visited 13 times, 1 visits today)

Mithu

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்