18,000 வெளிநாட்டினர் விரைவில் வெளியேற்றும் ஐரோப்பிய நாடு
ஐரோப்பிய நாடான போர்ச்சுகலில் வசிக்கும் சுமார் 18,000 வெளிநாட்டினர் விரைவில் வெளியேற்றப்படுவார்கள் என அரசாங்கம் அறிவித்துள்ளது.
உரிய ஆவணங்கள் இல்லாததால் அவர்களை வெளியேற்றப்போவதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. இம்மாதம் 18 ஆம் திகதி போர்ச்சுகலில் தேர்தல் நடக்கவிருக்கிறது. அதற்குள் வெளிநாட்டினர் வெளியேற்றப்படுவர் என்று தெரிகிறது.
போர்ச்சுகலில் வெளிநாட்டினருக்கு எதிரான கருத்துகள் பிரபலம் அடைந்துவருகின்றன.
ஐரோப்பா முழுவதும் இப்போது வலசாரி அரசாங்கங்கள் வலுவடைந்துவருகின்றன.
போர்ச்சுகலிலும் வலசாரி கட்சிகள் பிரபலமாகின்றன. சென்ற ஆண்டு அங்கு நடந்த தேர்தலில் வலசாரி சேகா கட்சி மூன்றாம் இடத்தைப் பிடித்தது.





