ஐரோப்பா

சுற்றுலா பயணிகளுக்கான வரியை உயர்த்திய ஐரோப்பிய நாடு!

ஸ்பெயினின் – பார்சிலோனா (Barcelona)  நகரம் சுற்றுலாப் பயணிகளுக்கான வரியை இரட்டிப்பாக அதிகரித்துள்ளது.

இதற்கமைய விடுதிகளில் தங்கும் சுற்றுலா பயணிகளுக்கு ஒரு இரவுக்கு €15 (S$22.35) யூரோ வரை வரி விதிக்கப்படலாம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

பார்வையாளர்களின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்தவும், மலிவு விலை வீடுகளுக்கு நிதியளிக்கவும் இந்த வரி பயன்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய கட்டலோனியாவின் (Catalonia) பிராந்திய நாடாளுமன்றம், ஏப்ரல் முதல் பார்சிலோனாவில் உள்ள ஹோட்டல் விருந்தினர்களுக்கான வரியை ஒரு இரவுக்கு அதிகபட்சமாக €10 முதல் €15 வரை இரட்டிப்பாக்கும் சட்டத்திற்கு இன்று ஒப்புதல் அளித்துள்ளது.

இது ஹோட்டல் வகையைப் பொறுத்து வேறுப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி ஒருவர் தனது துணையுடன் நான்கு நட்சத்திர ஹோட்டலில் தங்குவதற்கு தற்போது கூடுதலாக €45.60 யூரோவை செலவழிக்க வேண்டும்.

அதேபோல் ஐந்து நட்சத்திர ஹோட்டல்களில் விருந்தினர்களிடம் ஒரு இரவுக்கு €15 யூரோ வரை கட்டணம் வசூலிக்கப்படலாம்.

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!