இங்கிலாந்தில் நீரிழிவு நோய் சிகிச்சையில் இன ரீதியான பாகுபாடு ; ஆய்வில் வெளியான அதிர்ச்சித் தகவல்
இங்கிலாந்தில் கறுப்பின மற்றும் தெற்காசிய வம்சாவளி மக்கள், நீரிழிவு நோய்க்கான நவீன தொழில்நுட்பங்களைப் பெறுவதில் பெரும் சவால்களைச் சந்தித்து வருவது ஆய்வில் தெரியவந்துள்ளது.
இரத்தச் சர்க்கரை அளவைக் கண்காணிக்கும் சி.ஜி.எம் (CGM) கருவிகள், வெள்ளை இனத்தவர்களுக்கே அதிகம் பரிந்துரைக்கப்படுகின்றன. குறைந்த அளவு கருவிகள் வழங்கப்படும் பகுதிகளில் 17.5 சதவீத சிறுபான்மையினர் வாழ்கின்றனர்.
ஆனால், அதிக கருவிகள் வழங்கப்படும் இடங்களில் அவர்களின் எண்ணிக்கை வெறும் 5.3 சதவீதமே உள்ளது.
இனம் மற்றும் வறுமை ஆகிய காரணிகளே இந்த இடைவெளிக்கு 77 சதவீத காரணம் என ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
அனைவருக்கும் சமமான மருத்துவ வசதி கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என நீரிழிவு நோய் ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்





