திருகோணமலை வீரநகர் பகுதியில் கடலரிப்பு- வீடுகளுக்கு சேதம்!!
திருகோணமலை -வீரநகர் பகுதியில் கடல் அரிப்பு காரணமாக வீடுகள் தாழ் இறங்கியுள்ளது.
நாட்டில் ஏற்பட்ட அனர்த்தத்தை அடுத்து கடல் கொந்தளிப்பு அதிகரித்துள்ள நிலையில் கடலோரத்தில் அமைக்கப்பட்டுள்ள வீடுகள் கடல் அரிப்பு காரணமாக சேதமடைந்து காணப்படுகின்றது.
திருகோணமலை மட்டுமல்லாமல் கிண்ணியா மூதூர் அலஸ்தோட்டம் போன்ற பகுதிகளில் கடல் அரிப்பை தடுக்கும் முகமாக கட்பாறைகள் போடப்படாமையினால் கடல் கொந்தளிப்பு காரணமாக வீடுகளுக்குள் நீர் உட்பகுந்து வருவதாகவும் தெரியவந்துள்ளது.
கடல் அரிப்பை தடுக்கும் முகமாக கற்பாறைகளை போட்டு கடல் அரிப்பை தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கின்றனர்.





