ENGvsIND – 358 ஓட்டங்கள் குவித்த இந்திய அணி

இங்கிலாந்து- இந்தியா இடையிலான 4ஆவது டெஸ்ட் போட்டி மான்செஸ்டர் ஓல்டு டிராஃபோர்டில் நடைபெற்று வருகிறது. போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து பந்து வீச்சை தேர்வு செய்தது.
அதன்படி இந்தியா முதல் இன்னிங்சை தொடங்கியது. ஜெய்ஸ்வால்- கே.எல். ராகுல் ஜோடி முதல் விக்கெட்டுக்கு 94 ரன்கள் எடுத்தது.
இன்று இரண்டாம் நாள் ஆட்டம் தொடங்கியது. ஜடேஜா 20 ரன்னில் ஆட்டமிழந்தார். இதனையடுத்து ஷர்துல் தாகூர் – வாஷிங்டன் சுந்தர் ஜோடி சேர்ந்து பொறுப்புடன் விளையாடினர். தாகூர் 41 ரன்னில் ஆட்டமிழந்தார்.
முதல் நாளில் காலில் அடிப்பட்ட வெளியேறிய ரிஷப் பண்ட் மீண்டும் களமிறங்கினார். அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தார்.
நிதானமாக விளையாடி கொண்டிருந்த வாஷிங்டன் சுந்தர் 27 ரன்னில் அவுட் ஆனார். அடுத்து வந்த காமோஜ் டக் அவுட் ஆனார்.
இதனால் இந்திய அணி முதல் இன்னிங்சில் 358 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. இங்கிலாந்து தரப்பில் ஸ்டோக்ஸ் 5 விக்கெட்டுகளையும் ஆர்ச்சர் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.