செய்தி விளையாட்டு

ENGvsIND – முதலாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி

இங்கிலாந்து – இந்தியா அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி லீட்சில் நடந்தது.

இதில் முதல் இன்னிங்சில் முறையே இந்தியா 471 ரன்களும், இங்கிலாந்து 465 ரன்களும் எடுத்தன. பின்னர் 6 ரன்கள் முன்னிலையுடன் 2வது இன்னிங்சில் 364 ரன்கள் குவித்து ஆல்-அவுட் ஆனது.

இதன் மூலம் இங்கிலாந்து அணிக்கு 371 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இங்கிலாந்து பேட்டிங் செய்து நான்காம் நாள் ஆட்டம் முடிவில் 21 ரன்கள் விக்கெட் இழப்பின்றி எடுத்தது.

இன்று கடைசி நாள் ஆட்டத்தில், 188 ரன்கள் சேர்த்த பிறகே முதல் விக்கெட்டை இங்கிலாந்து இழந்தது. இரண்டாவது இன்னிங்சில் பென் டக்கெட் 149 ரன்கள் குவித்தார்.

தொடக்கவீரர் சாக் க்ராலி 65 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். ஜோ ரூட் நிலைத்து நின்று அரைசதம் கடந்து அணியின் வெற்றிக்கு அச்சாரம் இட்டார்.

இறுதியில் இங்கிலாந்து அணி இரண்டாவது இன்னிங்சில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 373 ரன்களை குவித்து இங்கிலாந்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து அணி 1-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றுள்ளது.

(Visited 2 times, 1 visits today)

KP

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி