அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரருக்கு சம்மன் அனுப்பிய அமலாக்கத்துறை

சட்டவிரோத பணபரிமாற்ற வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை கைது செய்தது.
செந்தில்பாலாஜி நீதிமன்ற காவலில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், அவரது சகோதரர் அசோக் குமார் மற்றும் அவரது மனைவிக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி உள்ளது. இருவரும் விசரணைக்கு முன்னிலையாகும் படி சம்மனில் குறிப்பிடப்பட்டுள்ளது.
செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் வீடுகளில் அமலாக்கத்துறை சோதனை நடத்திய நிலையில் நேரில் முன்னிலையாக சம்மன் அனுப்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
(Visited 12 times, 1 visits today)