பூனைகள் மீது தீராத பகை : தென்கொரியாவில் பூனைகளை தேடி தேடி கொலை செய்த நபர்!

தென் கொரியர் ஒருவருக்கு 76 பூனைகளைக் கொன்றதற்காக 14 மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
சமீபத்திய ஆண்டுகளில் நாட்டின் மிகக் கொடூரமான விலங்கு கொடுமை வழக்குகளில் ஒன்றாக இது பதிவு செய்யப்பட்டுள்ளது.
குற்றவாளி டிசம்பர் 2022 மற்றும் செப்டம்பர் 2023 க்கு இடையில் 70இற்கும் மேற்பட்ட பூனைகளை கொலை செய்துள்ளார்.
பூனை ஒன்று தனது காரை கீறி சேதப்படுத்தியதனால் மற்ற பூனைகள் மீதும் வெறுப்பு ஏற்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இதன்காரணமாக பூனைகளை கொலை செய்ததாக தெரிவித்துள்ளார்.
குறிப்பாக பூனைகளை கொலை செய்வதற்காக அவர் ஆன்லைன் தளங்களில் இருந்து அவற்றை தத்தெடுத்துள்ளார். பின்னர் கொடூரமாக கொலை செய்துள்ளார்.
(Visited 13 times, 1 visits today)