நிரந்தர நியமனம் கோரி போராட்டத்தில் ஈடுபட்ட கிழக்கு மாகாண உள்ளூராட்சி மன்றங்களில் கடமையாற்றும் ஊழியர்கள்
நிரந்தர நியமனம் வேண்டும் என கிழக்கு மாகாண உள்ளூராட்சி மன்றங்களில் கடமையாற்றும் தற்காலிகமாக வேலை செய்யும் ஊழியர்கள் திருகோணமலையில் உள்ள கிழக்கு மாகாண சபைக்கு முன்னால் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நீண்ட காலமாக நிரந்தர நியமனம் இன்றி தற்காலிகமாக தற்காலிகமாக உள்ளூராட்சி மன்றங்களில் கடமையாற்றி வருகின்றோம். தற்போதைய வாழ்க்கை செலவுக்கு தமது தற்காலிக வேலைக்காக வழங்கப்படும் வேதனம் போதாது.
தங்களை நிரந்தரமாக்க அரசாங்கம் முன் வர வேண்டும் எனக் கோரி பதாதைகளை ஏந்தியவாறு கோஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அம்பாறை ,திருகோணமலை, மட்டக்களப்பு போன்ற பகுதிகளை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் இப்போராட்டத்தில் ஈடுபட்டனர்.
குறித்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கிழக்கு மாகாண முதலமைச்சர் செயலகத்தில் கடமையாற்றும் அதிகாரிகளை சந்தித்து மகஜர் ஒன்றிணையும் கையளித்து விட்டு கண்டி பிரதான வீதியூடாக ஆளுநர் அலுவலகத்தை நோக்கி நடைப்பயணியாக சென்றிருந்ததும் குறிப்பிடத்தக்கது.