இலங்கையில் வெள்ளபெருக்கு குறித்து வெளியான அவசர அறிவுப்பு!
களு கங்கையின் கிளை நதியான குடா கங்கை மில்லகந்த பிரதேசத்தில் சிறு வெள்ளப்பெருக்கு நிலையை எட்டியுள்ளதாக நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.
இன்று மாலை 6 மணியளவில் குடா கங்கையின் நீர்மட்டம் 6.53 மீற்றராக உயர்ந்துள்ளதாக திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.
இது 8 மீற்றர் மட்டத்தை தாண்டினால் அது பாரிய வெள்ளப்பெருக்கு நிலை என நீர்ப்பாசனத் திணைக்களம் குறிப்பிடுகின்றது.
மேலும், தற்போது பெய்து வரும் மழையுடன் மகுரு ஆற்றின் நீர்மட்டமும் அதிகரித்து வருவதாக நீர்ப்பாசன திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
இது தவிர, கிங் மற்றும் நில்வலா ஆறுகளின் நீர்மட்டமும் அதிகரித்து வருவதாக நீர்ப்பாசன திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.
(Visited 13 times, 1 visits today)





