அடக்கமுறைக்காக அல்ல அவசரகால சட்டம்!
” அவசரகால சட்டம் நீடிப்பு தொடர்பில் அச்சம் கொள்ள வேண்டியதில்லை. அச்சட்டம் தவறான நோக்கங்களுக்காக பயன்படுத்தப்படமாட்டாது.” – என்று பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.
அவசரகால சட்டத்தை மேலும் ஒரு மாதத்துக்கு நீடிப்பது தொடர்பான பிரேரணையை முன்வைத்து உரையாற்றுகையிலேயே பிரதமர் இவ்வாறு கூறினார்.
“ பேரிடரையடுத்து நாட்டில் இன்னும் இயல்பு நிலை முழுமையாக வழமைக்கு திரும்பவில்லை. இடைத்தங்கள் முகாம்களில் மக்கள் இருக்கின்றனர். அத்தியாவசிய சேவைகளை தடையின்றி முன்னெடுக்க வேண்டிய தேவை உள்ளது.
எனவே, அனர்த்த நிலைமையை முகாமை செய்வதற்காகவே அவசரகால சட்டம் பயன்படுத்தப்படுகின்றது. அத்தியாவசிய சேவை ஆணையாளர் பதவியை தக்கவைப்பதற்கும் அச்சட்டம் தேவைப்படுகின்றது.
மாறாக கருத்து சுதந்திரத்தை ஒடுக்கவோ அல்லது தவறான நோக்கங்களுக்காகவோ அவசர கால சட்டம் பயன்படுத்தப்படவில்லை. அச்சட்டத்தை தொடர்ந்து நீடிப்பதற்கும் எதிர்பார்க்கவில்லை.” – எனவும் பிரதமர் குறிப்பிட்டார்.





