கொங்கோவில் தீவிரமடையும் எம்பொக்ஸ் – 610 பேர் மரணம்

குரங்கு காய்ச்சல் எனப்படும் எம்பொக்ஸ் தொற்றால் கொங்கோ குடியரசில் இதுவரை 610 பேர் வரை உயிரிழந்ததாக தெரியவந்துள்ளது.
அந்த நாட்டு சுகாதார அமைச்சு இந்த விடயத்தை தெரிவித்துள்ளது.
இதுவரை 17,800ற்கும் அதிகமான தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இந்தநிலையில், அங்கு தடுப்பூசிகளைச் செலுத்திக்கொள்வது அவசியம் என அந்த நாட்டு மக்களுக்கு சுகாதார திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.
அடுத்த மாதம் கொங்கொ குடியரசின் கல்வி நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில், சுகாதார நடவடிக்கைகளும் பலப்படுத்தப்பட்டு வருகின்றன.
(Visited 40 times, 1 visits today)