தென் அமெரிக்கா

சொத்துக்குவிப்பு வழக்கு: பெருவின் அதிபர்டினா பொலுவார்டேவிடம் விசாரணை

தென் அமெரிக்க நாடான பெருவில் கடந்த 2022ம் ஆண்டு முதல் பெண் அதிபராக டினா பொலுவார்டே பதவியேற்றார். இந்தநிலையில் அவர் தன்னுடைய பதவியை துஷ்பிரயோகம் செய்து ஆடம்பர கைகடிகாரங்கள், நகைகள் ஆகியவற்றை வாங்கி குவித்ததாக புகார் அளிக்கப்பட்டது.

இதனையடுத்து அதிபர் மாளிகை மற்றும் டினா பொலுவார்டே வீடுகளில் பொலிஸார் தீவிர சோதனை மேற்கொண்டனர். அதில் கணக்கில் வராத பலகோடி மதிப்பிலான தங்க-வைர நகைகள்,சொத்து பத்திரங்கள், வங்கி கணக்கு புத்தகங்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.

இந்தநிலையில் பொலிஸார் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்தனர். அரசு வக்கீல்கள் முன்னிலையில் அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது.

இதனிடையே சொத்துக்குவிப்பு வழக்கில் சிக்கிய டினா பொலுவார்டே மந்திரிசபையை கலைத்து புதிதாக 6 மந்திரிகளுக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார். அதிபர் பதவியில் இருந்து அவர் விலக வலியுறுத்தி பெருவில் நாடுதழுவிய போராட்டம் நடைபெறுகிறது.

(Visited 10 times, 1 visits today)

Mithu

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

தமிழ்நாடு தென் அமெரிக்கா

3D அனிமேஷன் மற்றும் விஷுவல் எஃபெக்ட்ஸ் சார்ந்த துறைகளில் கடல் போல வாய்ப்புகள்

மாயா அகாடமி ஆஃப் அட்வான்ஸ்டு சினிமாட்டிக்ஸ் எனும் மாக்  (MAAC) கோவையில்  நவீன 3D அனிமேஷன் மற்றும் விஷுவல் எஃபெக்ட்ஸ் குறித்து இளம் தலைமுறை மாணவ,மாணவிகளுக்குபயிற்சி அளித்து
தென் அமெரிக்கா

அவள் என் காதலி.. 800 வருடங்கள் பழமையான மம்மியோடு பொலிஸில் சிக்கிய 26 வயது இளைஞன்!

பெரு நாட்டில் 800 வருடப் பழமையான மம்மியை உணவு வழங்கப்பயன்படும் பையில் வைத்து, எடுத்துச் செல்லும் போது காவல்துறையிடம் நபர் ஒருவர் சிக்கியுள்ளார். பெரு நாட்டை சேர்ந்த