எலான் மஸ்க்கிற்கு கடும் எதிர்ப்பு வெளியிடும் மகள் – பல இரகசியத்தை அம்பலப்படுத்தியதால் சர்ச்சை

கோடீஸ்வரர் எலான் மஸ்க்கின் மூத்த மகள், தனது தந்தை அமெரிக்க அரசாங்கத்தில் இணைந்தது குறித்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்துள்ளார்.
விவியன் ஜென்னா வில்சன் தனது தந்தை அமெரிக்க அரசாங்கத்தில் சேருவதற்கு தனது எதிர்ப்பை வெளிப்படுத்தியதாக கூறப்படுகிறது.
எலான் மஸ்க்கின் 20 வயது மகள் கடந்த ஒரு வருடமாக தனது தந்தையிடமிருந்து பகிரங்கமாகப் பிரிந்து வாழ்ந்து வருகிறார்.
அதன் பிறகு அவருடன் நடத்தப்படும் இரண்டாவது பத்திரிகையாளர் சந்திப்பு இது என தெரிவிக்கப்படுகிறது.
இங்கே, உலகின் மிகப் பெரிய பணக்காரரின் மகளாக தனது குழந்தைப் பருவத்தைக் கழிப்பது எப்படி இருந்தது என்று பத்திரிகையாளர் அவரிடம் வினவியுள்ளார்.
அங்கு, 16 வயதில் பாலின உறுதிப்படுத்தல் சிகிச்சையைப் பெறுவதற்குத் தேவையான ஆவணங்களில் தனது தந்தையின் கையொப்பம் மோசடியானது என்று அவர் கூறினார்.
இந்த குடும்பத்தில், ஐந்து உடன்பிறப்புகளும் அடங்கிய நிலையில், தான் கடுமையான மன அழுத்தத்தில் இருந்ததாகவும் அவர் ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க ஜனதிபதி டொனால்ட் டிரம்பின் பதவியேற்பு விழாவில் எலோன் மஸ்க் வரவேற்றதற்கு அவர் கடும் எதிர்ப்பு தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது