விரைவில் உலகின் முதல் டிரில்லியனராகும் எலோன் மஸ்க்
விரைவில் உலகின் முதல் டிரில்லியனர் என்ற பெறுமையை எலோன் மஸ்க் (Elon Musk) பெறுவார் என தெரிவிக்கப்படுகின்றது.
அதாவது ஒரு டிரில்லியன் டொலர் மதிப்பிலான சொத்து வைத்திருக்கும் நபராக அவர் வருவார் என கூறப்படுகின்றது.
Tesla, X, SpaceX ஆகிய நிறுவனங்களை நடத்தி வரும் அவர் ஏற்கனவே உலகின் ஆகப் பெரிய பணக்காரர்.
அவரின் சொத்தின் மதிப்பு கிட்டத்தட்ட 250 பில்லியன் டொலர் என்று குறிப்பிடப்படுகின்றது.
2027ஆம் ஆண்டுக்குள் அது ஒரு டிரில்லியனை எட்டக்கூடும் என்று Informa Connect Academy நிறுவனம் கணித்துள்ளது.
அவரின் சொத்து மதிப்பு ஆண்டுக்கு 110 சதவீதம் அதிகரிப்பதாக குறிப்பிடப்படுகின்றது.
எனினும் Nvidia நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியும் இணை நிறுவனருமான ஜென்சன் ஹுவாங் (Jensen Huang) மஸ்கிற்குப் போட்டியாக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகின்றது.
அவரின் சொத்து மதிப்பு தற்போது சுமார் 104 பில்லியன் டொலராகும். 2028ஆம் ஆண்டுக்குள் அது ஒரு டிரில்லியனாகலாம் என்று Informa கூறியது.