உலக பணக்காரர்கள் பட்டியலில் எலோன் மஸ்க் மீண்டும் முதலிடம்

இந்த ஆண்டும் உலக பணக்காரர்கள் பட்டியலில் எலோன் மஸ்க் முதலிடம் பிடித்துள்ளார்.
கடந்த 12ம் திகதி நிலவரப்படி இவரது சொத்து மதிப்பு 253.2 பில்லியன் அமெரிக்க டொலர்கள் என வெளிநாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.
அமெரிக்கரான எலோன் மஸ்க் டெஸ்லா மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனங்களை வைத்துள்ளார், அவருக்கு தற்போது 52 வயதாகிறது.
அமேசான் உரிமையாளர் ஜெஃப் பெசோஸ் 171 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் இரண்டாவது இடத்தில் உள்ளார்.
மூன்றாவது இடத்தில் பிரெஞ்சு தொழிலதிபர் பெர்னார்ட் அர்னால்ட் உள்ளார்.
இதேவேளை, உலகப் பணக்காரர்கள் பட்டியலில் நான்காவது இடத்திலிருந்து 10வது இடம் வரை அமெரிக்கர்களும் இடம்பெற்றுள்ளமை விசேட அம்சமாகும்.
(Visited 15 times, 1 visits today)