எல்ல – வெல்லவாய விபத்து – தயார் நிலையில் ஹெலிகப்டர்கள்

எல்ல-வெல்லவாய வீதியில் நேற்று இரவு ஏற்பட்ட பேருந்து விபத்தில் பாதிக்கப்பட்டவர்களை மீட்கும் பணிகளில் உதவுவதற்காக இலங்கை விமானப்படைக்கு சொந்தமான இரண்டு ஹெலிகப்டர்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது.
தியதலாவாவில் உள்ள விமானப்படை விமானி பயிற்சி கல்லூரியில் இருந்து ஒரு MI-17 விமானமும், வீரவில விமானப்படை தளத்திலிருந்து பெல் 412 ரக ஹெலிகப்டரும் அனுப்பப்பட்டதாக விமானப்படை தெரிவித்துள்ளது.
அவசரகால நோயாளிகளை கொழும்புக்கு அல்லது பிற மீட்பு நடவடிக்கைகளுக்கு கொண்டு வர ஹெலிகாப்டர்கள் தயாராக இருப்பதாக விமானப்படை தெரிவித்துள்ளது.
விபத்தில் காயமடைந்த பலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ள நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
(Visited 1 times, 1 visits today)