இலங்கையில் மீண்டும் மின்சார கட்டணத் திருத்தம் – இன்று வெளியாகும் அறிவிப்பு!

இலங்கையில் இந்த ஆண்டுக்கான இரண்டாவது மின்சார கட்டணத் திருத்தத்தை இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு இன்று அறிவிக்கவுள்ளது.
மின்சார கட்டணக் குறைப்பு தொடர்பான முன்மொழிவுகளை இலங்கை மின்சார சபை அண்மையில் இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிற்கு அனுப்பி வைத்திருந்தது.
இந்தக் கட்டணத் திருத்தம் தொடர்பான முன்மொழிவுகளை மீளாய்வு செய்து உரிய தரவுகளை ஆராய்ந்து பொதுமக்களின் கருத்துக்களை இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு பெற்றுள்ளது.
இந்த நிலையில் இது தொடர்பான விசேட கலந்துரையாடல் இன்று காலை இடம்பெறவுள்ளது.
அத்துடன் திருத்தப்பட்ட மின்சார கட்டணம் பிற்பகல் அறிவிக்கப்படும் எனவும் இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் மஞ்சுள பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
(Visited 17 times, 1 visits today)