இலங்கையில் மின் கட்டண உயர்வு : மக்கள் மீது சுமையை ஏற்றிவருவதாக குற்றச்சாட்டு!
நிலுவையில் உள்ள 39 பில்லியன் ரூபாவிற்கும் அதிகமான மின்சார கட்டணத்தை மீளப்பெறுவதற்கு நடவடிக்கை எடுக்காமல் மின்சார சபை மக்கள் மீது சுமையை ஏற்றி வருவதாக வணக்கத்திற்குரிய ஓமல்பே சோபித தேரர் தெரிவித்துள்ளார்.
இலங்கை மின்சார சபையின் கோரிக்கைக்கு அமைய, மின்சார கட்டணத்தை அதிகரிப்பதற்கு பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு நேற்று (20.10) அனுமதி வழங்கியது.
இதன்படி, உள்நாட்டு பிரிவினருக்கான மின் கட்டணம் 18 சதவீதம் அதிகரிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே மின் கட்டண உயர்வை கண்டித்து பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் நடத்தப்பட்டன.
இதேவேளை, மின்சார பாவனையாளர் சங்கம் மற்றும் எம்பிலிப்பிட்டிய வர்த்தக சங்கம் இணைந்து ஏற்பாடு செய்திருந்த ஆர்ப்பாட்டம் ஒன்று எம்பிலிபிட்டிய நகரில் இடம்பெற்றது.
(Visited 3 times, 1 visits today)