காஸாவில் சிக்கியுள்ள இலங்கையர்கள் உள்ளிட்ட வெளிநாட்டவர்களுக்கு எகிப்தின் கதவு திறக்கப்பட்டது
இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையிலான மோதல்களுக்கு மத்தியில் காஸா பகுதியில் சிக்கித் தவித்த வெளிநாட்டவர்கள் அதிலிருந்து மீள்வதற்கான வாய்ப்பு இன்று கிடைத்துள்ளது.
அதன்படி, 10 ஜப்பானிய பிரஜைகள் எகிப்துக்கு வந்துள்ளதாக ஜப்பான் சற்று முன்னர் உறுதிப்படுத்தியுள்ளது. காஸாவில் 17 இலங்கையர்களும் உள்ளனர்.
அவர்கள் ரஃபா நுழைவாயில் ஊடாக எகிப்துக்குள் நுழைய அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த இலங்கையர்களில் 15 பேர் எகிப்து செல்லவுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு அலுவலகத்தின் பேச்சாளர் காமினி செனரத் யாப்பா தெரிவித்துள்ளார்.
காணாமல் போன மற்றுமொரு இலங்கையர் ஹமாஸால் பிடிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ரஃபா நுழைவாயில் திறக்கப்பட்டால், 400 முதல் 500 வெளிநாட்டினர் வெளியே வருவார்கள் என்று நம்பப்படுகிறது.
இருப்பினும், காஸா பகுதியில் இன்னும் கடுமையான மோதல்கள் உள்ளன. .