ஜெர்மனியில் இருக்கும் 3000 ஆண்டுகள் பழமையான சிலையை திரும்பக் கோரும் எகிப்து!
ஒரு எகிப்திய தொல்பொருள் ஆராய்ச்சியாளர் பழங்கால இராணி ஒருவரின் மார்பளவு சிலையை திரும்பக்கோரியுள்ளனர்.
புகழ்பெற்ற நிபுணரான ஜாஹி ஹவாஸ், 3,000 ஆண்டுகள் பழமையான ராணி நெஃபெர்டிட்டியின் மார்பளவு சிலையை எகிப்துக்குத் திரும்பக் கோரி ஒரு மனுவைத் தாக்கல் செய்திருந்தார்.
ஜேர்மனியின் பெர்லினில் உள்ள நியூஸ் அருங்காட்சியகத்தில் தற்போது காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள மார்பளவு சிலை 1912 ஆம் ஆண்டு ஜெர்மன் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் குழுவால் கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த சிலை சட்டவிரோதமாக ஜெர்மனிக்கு கொண்டு செல்லப்பட்டதாக மனுதாரர் தெரிவித்துள்ளார்.
ஏறக்குறைய 2,000 கையொப்பங்களைப் பெற்றுள்ள இந்த மனு, எகிப்தின் வரலாற்றுத் தொல்பொருட்களை மீட்டெடுக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக உள்ளது.
(Visited 8 times, 1 visits today)