வெப்பமான காலநிலை காரணமாக செல்லப்பிராணிகளுக்கு ஏற்படும் பாதிப்புகள்
தற்போது நிலவும் வெப்பமான காலநிலை காரணமாக வீட்டில் வளர்க்கப்படும் செல்லப்பிராணிகள் விலங்குகளின் பக்கவாதத்தால் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது.
சுற்றுச்சூழல் வெப்பநிலை அதிகரிப்புடன், தெரு நாய்கள், வீட்டு செல்லப்பிராணிகள் மற்றும் வன விலங்குகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக விலங்கு நல ஆர்வளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
மேலும், நாய், பூனை போன்ற விலங்குகளுக்கு அதிக வெப்பத்தால் வெப்ப வாதம் ஏற்படும் அபாயம் உள்ளது.
செல்லப்பிராணிகளை ஒரு நாளைக்கு இரண்டு அல்லது மூன்று முறை குளிப்பாட்டுவது நல்லது என கால்நடை மருத்துவர்கள் குறிப்பிடுகின்றனர். அத்துடன், விலங்குகளுக்கு தண்ணீர் கிண்ணத்தை வைத்து உடல் வெப்பநிலையை கட்டுப்படுத்த வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளனர்.
(Visited 5 times, 1 visits today)