புதிய பாடத்திட்டம் தொடர்பில் பிரதமர் விசேட அறிவிப்பு
நாளை ஆரம்பமாகும் புதிய கல்வி ஆண்டில், தரம் 1 மற்றும் தரம் 6 மாணவர்களுக்கான புதிய பாடத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படும் திகதிகளை பிரதமர் ஹரிணி அமரசூரிய இன்று அறிவித்தார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் பேசிய பிரதமர், தரம் 6 மாணவர்களுக்கான புதிய பாடத்திட்டம் ஜனவரி 21ஆம் திகதியும், தரம் 1 மாணவர்களுக்கான புதிய பாடத்திட்டம் ஜனவரி 29ஆம் திகதியும் ஆரம்பிக்கப்படும் எனத் தெரிவித்தார்.
புதிய சீர்திருத்தத்திற்கு ஏற்ப 1 லட்சத்து 32 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்களுக்கு ஏற்கனவே பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளதாகவும், கற்பித்தல் பணிகளில் ஈடுபடும் ஆசிரியர்களில் 93 சதவீதமானோர் பயிற்சியை பூர்த்தி செய்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
மாணவர்களுடன் சேர்த்து பெற்றோர்களையும் இந்த புதிய முறைக்கு பழக்கப்படுத்துவதற்கான விசேட வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் பிரதமர் மேலும் குறிப்பிட்டார்.





