ஈஸ்டர் தாக்குதல் விவகாரம் : குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையானார் மைத்திரி!
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சற்று முன்னர் குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு விஜயம் செய்துள்ளார்.
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலில் ஈடுபட்டவர்களை தமக்கு தெரியும் என திரு மைத்திரிபால சிறிசேன கண்டியில் அண்மையில் கருத்து வெளியிட்டிருந்தார்.
குறித்த அறிக்கை தொடர்பில் அவசர விசாரணைகளை மேற்கொள்ளுமாறு பொது பாதுகாப்பு அமைச்சர் திரு.திரான் அலஸ் பொலிஸ் மா அதிபருக்கு பணிப்புரை விடுத்திருந்தார்.
இதன்படி, வாக்குமூலம் ஒன்றை பதிவு செய்வதற்காக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று காலை 10.30 மணியளவில் குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டுள்ளார்.
(Visited 20 times, 1 visits today)





