ஆப்கானிஸ்தானை உலுக்கிய நிலநடுக்கம் – 1,400ஐ தாண்டிய மரணங்களின் எண்ணிக்கை

ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,400ஐ தாண்டியுள்ளது.
உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,411 என தலிபான் அதிகாரிகளை மேற்கோள் காட்டி வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பல நாடுகள் உதவி செய்து வருகின்றன.
பிரித்தானியா 1.35 மில்லியன் டொலர் உதவியை வழங்கியுள்ளது. இந்தியா ஆப்கானிஸ்தானுக்கு 15 டன் உணவு மற்றும் 1,000 கூடாரங்களை வழங்கியுள்ளது.
(Visited 1 times, 1 visits today)